தமிழ் இணைய விஞ்ஞானி உமர்தம்பி-01

  • பிறப்பிடம் – அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
  • பெற்றோர் – அ. அப்துல் அமீது – ரொக்கையா
தனது துவக்கக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியையும் அதிராம்பட்டிணத்திலும், தனது Bsc (விலங்கியல்) பட்ட படிப்பினை அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் படித்தார்கள்.
அதன் பின் இலத்திரனியலில் டிப்ளோமா படிப்பினையும் முடித்த உமர் தனது ஊரிலேயே

1983 ஆம் ஆண்டு வானொலி, தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார்.

மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.
இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, 1984 ஆம் ஆண்டு துபாயில் உள்ள Al Futtaim Group of Companies ல் இலத்திரனியல் உபகரணங்களுக்கான National Panasonic பழுது நீக்கும் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
கல்வி பயிலும் காலகட்டத்திலேயே 1977 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார்.
துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார். Network Administrator, SAP Implementation Team Head, Kiosk Programmer எனக் கணினித் துறையில் திறம்பட பணியாற்றியிருக்கிறார்.
ஒரு குழுவை முன்னின்று நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது. பதினேழு ஆண்டுகளாக துபாயில் இந்தப் பணியைச் செய்த அவர், அவர் 2001 மாவது ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று தாயகம் திரும்பினார்.
தாயகம் திரும்பிய அவர் தனது ஊரிலிருந்து கொண்டே தனது மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்து பராமரித்து வந்துள்ளார்கள்.
Close