2.5% சதவீதம் ஏழைக்கு கொடுத்தால் 97.5% காக்கப்படும்..

அகீமுஸ்ஸலாத் வஆதுஸ்ஸகாத்த தொழுகையை நிலை நிறுத்தி(த் தொடர்ந்து தொழுது) வாருங்கள்! மேலும் ஜக்காத்தும் கொடுத்து வாருங்கள்!அல்லாஹ் குர் ஆன் ஷரீபில் தொழுகையைப் பற்றி கட்டளையிடும் போதெல்லாம் ஜக்காத்தையும் இணைத்தே கூறுவது சிந்திக்கத் தக்கது கலிமாவில் லாஇலாஹ இல்லல்லாஹ் வை தொடர்ந்து முஹம்மதுற்றசூலுல்லாஹ்
எவ்வாறு இணை பிரியாமல் தொடர்ந்து வருகிறதோ அதே போல தொழுகையும் ஜக்காத்தும் பின்னிப் பிணைந்தே மார்க்கத்தில் வலியுறுத்தப்படுகிறது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் கலிமா- தொழுகை- நோன்பு – ஹஜ்ஜு இந்த நான்கும் இறைவனோடு தொடர்பை ஏற்படுத்திச் செய்யும் அமல்கள் ஆனால் ஜக்காத்து மட்டும் மனிதர்களின் தொடர்பு இல்லாமல் நிறை வேற்ற முடியாத கடமையாக தனித்தன்மை பெறுகிறது ஏழைகளுக்கு வழங்குவதை அவர்கள் துன்பம் துடைப்பதையே ஓர் இபாதத்தாக – இறை வணக்கமாக- தனக்குச் செய்த உபகாரமாக- அல்லாஹ் அங்கீகரிப்பது மிகவும் ஆராயத்தக்கது சதக்காவுக்கும் ஜக்காத்துக்கும் வித்தியாசமுன்டு- சதக்கா ( தர்மம்) கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் ஆனால் ஜக்காத்தோ கொடுக்காவிட்டால் இறை தண்டனைக்கு ஆளாக வேண்டி வரும் மனிதர்கள் இரண்டு பிரிவுகளில் அடங்கி விடுவர் ஒன்று ஏழை; மற்றொன்று பணக்காரர் . இந்த இரண்டுவகைத் தன்மைகளுக்கும் மனிதர்களில் மாறி மாறி வரக்கூடியது ஏழை ஒரு நாள் பணக்காரராகவும் , சீமான் ஒரு நாளில் ஏழையாக மாறிடவும் வாய்ப்புண்டு ஏழை ஒரு காலத்தில் சீமானாககும் போது தான் இருந்த ஏழ்மை நிலையை உணர்வதற்காகவும்- சீமான் ஒரு காலத்தில் ஏழையாகும் போது சீமானாக இருந்து வழங்கிய ஜக்காத்தின் புண்ணியம் அந்த ஏழ்மை நிலையில் உதவவும் வாய்ப்பாகிறது ஆனால் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் ஜக்காத்து கொடுப்பதன் காரணத்தால் – ஏழையாகி விட மாட்டான் என்று நற்செய்தி கூறியுள்ளார்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பொருளாதாரப் புரட்சி சமூகத் திட்டத்தை அருளிய அல்லாஹ்வும் இதனை அமுல் படுத்திய அண்ணல் நபி( ஸல்) அவர்களும் இதில் பல நுணுக்கமான விஷயங்களைப் பொதிந்து வைத்திருக்கிறார்கள் அது பின் வருமாறு 1- ஜக்காத்து வழங்கும் செல்வந்தன் ஏழைக்கு வழங்கும் போது அல்லாஹ்வின் பரக்கத்தை ஏழைக்கு கொண்டு சேர்க்கும் இறைவனின் பிரதி நிதியாக மாறிப் போகிறான் 
2) ஜக்காத் வழங்குபவன் தான் உழைத்துச் சம்பாதிக்கும் போது அவனது செல்வத்திலிருந்து இரண்டரை சதவீதம் ஏழைக்கும் போவதால் அவன் ஏழைகளுக்கும் சேர்ந்தே உழைக்கிறான் சம்பாதிக்கிரான் 3) பணக்காரனைப் பார்த்து நமக்கெல்லாம் அல்லாஹ் கொடுக்கவில்லை என ஏழை எண்ணாமலிருக்க ஏழையே! உன் பங்கையும் செல்வந்தனின் கைகளில் தருகிறேன் எனும் இறை ரகசியம் இதில் அடங்கி இருக்கிறது 4) வானம் பார்த்த பூமியைப் போல வாழ்க்கையே காய்ந்து கிடக்கும் ஏழையின் கண்ணீரை பணம் எனும் கைகளால் துடைக்கும் வாய்ப்பு செல்வந்தனுக்கு கிடைக்கிறது அப்போது அவன் மகிழ்சியடைகிறான் ஏழ்மை இத்தனை துன்பமா? எனப் பாடமும் படிக்கிறான் தனது வறுமையை நீக்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பும் கிடக்கிறது 5) ஏழையும் செல்வந்தனும் அறிமுகமாகிக் கொள்வதால் ஏழைக்கு இயற்கையாக செல்வந்தன் மீது ஏற்படும் வெறுப்பு – பொறாமை நீங்கி சமூக நல்லிணக்கம் ஏற்படுகிறது 6) செல்வந்தன் தன் சொத்து கணக்கை தானே பார்த்துக் கொள்ள ஜக்காத்து அருமையான வாய்ப்பைத் தருகிறது 7) ஜக்காத்து வழங்குவதை உறவினர்களிலிருந்து தொடங்கச் சொல்லி இருப்பதால் குடும்ப உறவுகள் வலுவடைகின்றன 8) இப்படி எத்தனையோ நுணுக்கமான பயன்களை உள்ளடக்கிய ஜக்காத் இன்னொரு உண்மையையும் முஸ்லீம்களுக்கு தெளிவு படுத்தி உணர வைக்கிறது அது என்ன? ”’ அஹ்ல பைத்”” எனும் ஸய்யிது மார்களாகிய திரு நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் ஜக்காத்தைப் பெற மாட்டார்கள் என அவர்களை உயர்வு படுத்தி அவர்களின் கண்ணியத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது அவர்களின் கரம் எப்போதும் கொடுக்கும் உயர்ந்த கரமேயன்றி ஜக்காத்து பெற கீழிருக்கும் கரமன்று என மாண்பளித்து மகத்துவமளிக்கிறது செல்வத்தில் இரண்டரை சதவீதம் வழங்கச்சொன்ன இறைவன் அப்படி வழங்கினால் தொண்ணூற்று ஏழரை சதவீத சொத்துக்கு பாதுகாப்பளிக்கிறான் சீமான்கள் ஜக்காத்தை வழங்கி தங்களின் செல்வங்களை இறைவனின் அருள் நிழலில் தற்காத்துக் கொள்வார்களாக


(கட்டுரை தொகுப்பு ஆலிம் புலவர் எஸ் – -ஹுசைன் முஹம்மது மன்பயீ 
Close