ரமலானை முன்னிட்டு கலைக்கட்டியது கடைத்தெரு!!!!

நமதூர் கடைத்தெருவில் சாதாரண நாட்களில் வடை,சம்சா கடைகள் இரண்டு அல்லது மூன்று என்ற அளவில் தான் இருக்கும்.ஆனால் ரமலான் மாதத்தில் கடைத்தெருவில் விதவிதமான கடைகள் ஒவ்வொரு வருடமும் அணிவகுக்கும்.அதற்க்கு இந்த வருடம் ஒன்றும் குறையில்லை.என்ன தான் தெருவிற்க்குத் தெரு
இரண்டு மூன்று பலகாரக் கடைகளை வியாபாரிகள் போட்டாலும் நம்ம ஊர் ஆண்கள் தக்வா பள்ளியில் அஸர் தொழுது விட்டு கடைத்தெருவில் தான் வாடா சம்சா போன்ற பலகாரங்களை வாங்குகின்றனர்.எனவே இந்த வருடமும் நமதூர் கடைத்தெருவில் மக்கள் கூட்டம் கூட்டமாக இஃப்தார் பண்டங்களை வாங்க வந்திருந்தனர்.சம்சா கடைகள் பல இருந்தாலும் அனைத்து கடைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
Close