Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பேரூராட்சியில் கடற்கரைத் தெரு இளைஞர்கள் மனு..! (படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரைத்தெருவில் கடந்த 15 ஆண்டுகளாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. தெருவின் நுழைவு வாயிலாக கருதப்படும் இப்பகுதியில் தொடரும் இப்பிரச்சனை காரணமாக அவ்வழியாக பெண்கள் மதர்ஷா செல்லும் மாணவிகளும், தொழுகையாளிகளும், பள்ளி குழந்தைகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மழை காலம் என்பதால் இந்த பிரச்சனை அப்பகுதியில் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து யாரையும் எதிர்பார்காமல் அப்பகுதி மக்களிடம் நிதி வசூல் செய்து சுகாதார பணிகளை முஹல்லாவாசிகள் செய்தனர்.

இந்த நிலத்தடியில் உள்ள பழைய கழிவு நீர் குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் புதிய குழாய்களை பேரூராட்சி சார்பில் அமைக்க கோரி அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் இன்று காலை பேரூராட்சி அலுவலகம் சென்று கோரிக்கை மனுவை வழங்கினர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy