டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு…இன்று முதல் அமல்!


டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்!டீசல் விலை ஒரு லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்து வருகின்றன. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு,கச்சா
எண்ணெய்விலை உயர்வு ஆகியவற்றைக் காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கின்றன.
தற்போது டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் வரை உயர்த்தி அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது 6வது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மே 31-ந் தேதியன்று கடைசியாக டீசல் விலை உயர்த்தப்பட்டது.
சென்னையில் டீசல் விலை வாட் வரியுடன் 61 காசுகள் உயர்ந்து ரூ53.53க்கு விற்பனை செய்யப்படும்.

Close