அதிராம்பட்டினம்-04 (பூர்வீகம்)

அதிரை பிறைஅதிரை மக்களின் முன்னோர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை என்ற ஊர்களில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் என்பது இந்த

மூன்று ஊர்களின் பழக்க வழக்கங்களை வைத்து நாம் அறியலாம்.

அதிரைக்கு முதன் முதலில் குடி பெயர்ந்தவர் கி.பி.1180 ஆம் ஆண்டில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த தஹ்லா மரைக்காயர் ஆவார்.இவர் தான் நமதூர் மரைக்காயர் பள்ளியைக் கட்டியவர்.இரண்டாவதாக கீழக்கரையைச் சேர்ந்த இஸ்மாயில் லெப்பை ஆலிம் அவர்கள்.இவர் 16ஆம் நூற்றாண்டில் அதிரைக்கு குடிபெயர்ந்தவர்.இவருடைய மகன் தான் முகலாய மன்னர்களுக்கு மிகச் சிறந்த ஆலோசனையாளராக திகழ்ந்தவருமான இமாமுல் ஆலம் அபூபக்கர் என்று பெயருடைய சின்ன லெப்பை ஆலிம் (ரஹ்).இவர் அதிரையில் இருந்து கீழக்கரைக்கு அங்குள்ள பழைய ஜும்மா மஸ்ஜிதில் இமாமத்து பணிகாக சென்றார்.இவர் தான் சீறா புராணத்தை எழுத உதவிய வள்ளல் சீதகாதி அவர்களின் ஆசிரியர் ஆவார். 
Close