அறிய கண்டுபிடிப்புக்காக ஜப்பான் செல்லும் தமிழக இளம் மாணவர் அபூபக்கர் சித்தீக்!

அறிய அறிவியல் கண்டுபிடிப்புக்காக ஜப்பான் செல்லும் இந்திய மாணவர் அணியில் இடம் பிடித்துள்ளார் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூரைச் சேர்ந்த அபூபக்கர் சித்தீக் என்ற மாணவர்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆசிய நாடுகளை பங்கேற்க வைக்கும் விதமாக ஜப்பான் – ஆசிய இளையோர் அறிவியல் பரிமாற்றத் திட்டத்தை (சுகுரா) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இந்தியா, சீனா, கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 15 நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின்படி ஜப்பான் செல்லவௌள்ள இந்திய மாணவர்கள் பட்டியலில் அபூபக்கர் சித்திக்கும் ஒருவர் இவரது தந்தை அம்சத் இப்ராஹீம் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துபவர்.

தற்போது 11 ஆம் வகுப்பு படிக்கும் அபூபக்கர் சித்திக்கின் திறமையை அவருக்கு பயிற்றுவித்த ஆசிரியை செல்வராணி உணர்ந்தார். எனவே, என்னை அறிவியல் கண்காட்சி களில் பங்கேற்க வைத்தார். மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை சார்பில் ‘இன்ஸ்பேர்’ விருதுக்கான போட்டி 2009-ம் ஆண்டு மாவட்ட அளவில் நடை பெற்றது. அதில், அபூபக்கர் சித்தீக் உருவாக்கிய எளிய முறையில் எடை அறியும் கருவி மாவட்ட அளவில் முதல் பரிசை வென்றது.

இப்படி படிப்படியாக மாநில அளவிலும், தேசிய அளவிலும் விருதுகளை பெற்ற அபூபக்கர் சித்தீக்கிற்கு 2013-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் விருந்தில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பை அறிவியல் தொழில்நுட்பத்துறை வழங்கியது.

இந்த நிலையில், ஜப்பான் செல்லும் 50 பேர் குழுவில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், யுகவேந்தன் ஆகிய 3 பேரும் செல்லவுள்ளனர்.

இந்த பயணம் குறித்து பெருமையாக கூறும் அபூபக்கர் சித்தீக், “நான் படித்த அரசு பள்ளியும், ஆசிரியை செல்வராணி, தலைமை ஆசிரியர் அருள்முருகன் ஆகி யோர் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணம். தற்போது நான் படிக்கும் மதுரை பிரிட்டோ பள்ளி தலைமை ஆசிரியர் அமல்ராஜின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றிருக்க முடியாது. வருகிற மே 7-ம் தேதி டெல்லியில் இருந்து ஜப்பான் செல்லவுள்ளோம். அங்குள்ள விண்வெளி ஆய்வு மையம், அறி வியல் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவதோடு, நோபல் விஞ்ஞானிகளையும் சந்திக் கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எதிர்காலத்தில் விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்கு இந்தப் பயணம் உதவும் என்று நினைக்கிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்..

வசதி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த அபூபக்கர் சித்தீக் தற்போது விடுமுறை நாட்களில் தமது அண்ணன்களுடன் எலக்ட்ரிக் வேலையில் ஒத்துழைத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close