அதிரையில் அதிக காற்றுடன் பலத்த மழை! மாணவர்கள் மகிழ்ச்சி!

நமதூரில் இன்று மாலை 5 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,இதனால் மக்கள் மழை வரும் என்று எண்ணிக்கொண்டிருந்தனர்.அவர்களின் எண்ணம் சரியாக 6:15 மணியளவில் நிறைவேரியது.பலத்த காற்றுடன்
பெய்த பலத்த மழையால் நமதூர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்த மழை கிட்டத்தட்ட 7 மணிவரை நீடித்தது.இப்பொழுது லேசாக தூரல் மட்டும் வருகிறது.இதனால் நமதூர் வெப்பம் தனிந்து குளிர்ச்சியாக காணப்படுகிறது மேலும் இந்த மழை நாளை வரை நீடித்தால் பள்ளி விடுமுறை விடுவார்கள் என்று பள்ளி மாணவர்கள் எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Close