அதிரையை கடந்து செல்லும் புதிய போக்குவரத்து வழிதடத்தினை தொடங்கி வைத்த முதலமைச்சர்

தூத்துக்குடி, கோரம்பள்ளம் பகுதியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி – வேளாங்கண்ணி இடையிலான கிழக்கு கடற்கரை சாலை வழியிலான புதிய பேருந்து வழிதடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வின் போது விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், மற்றும் அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Close