அதிரை சிட்னி அணியினர் அபார வெற்றி!!!


கடந்த மூன்று நாட்களாக அதிரை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மிலாரிக்காடு xxx அணியினர் நடத்திய கிரிக்கெட் போட்டியில் நமதூரில் உள்ள அணிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு அணிகளும் பங்கேற்றன.இந்த தொடர் போட்டியின் இறுதி ஆட்டம்,இன்று மாலை 4:30 மணியளவில் துவங்கியது
.இந்த போட்டியில் மிலாரிக்காடு xxx அணியினரும் அதிரை சிட்னி அணியினரும் மோதினர்,முதலில் கலம் இறங்கிய சிட்னி அணியினர் 5 ஒவருக்கு 36 ரன்கள் குவித்தனர்.
 அடுத்து கலம் இறங்கிய மிலாரிக்காடு அணியினர் சிட்னி அணியினரின் அதிரடிப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 5 ஒவர்களில் 27 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.
இதன் மூலம் அதிரை சிட்னி அணியின்ர் அபாரமாக வெற்றிபெற்று முதல் பரிசான 3000 ரூபாயைத் தட்டி சென்றனர் .

முதல் பரிசு – அதிரை சிட்னி அணியினர்
இரண்டாம் பரிசு – மிலாரிக்காடு xxx அணியினர்

Close