அதிரை AFCC அணி தோல்வி! சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது வேதாரண்யம்!

அதிரை நைட் ரைடர்ஸ் நடத்திய 3ம் ஆண்டு மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டமாக  AFCC Vs வேதாரண்யம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற AFCC அணி முதலில் மட்டைப்பணியை தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட
நான்கு ஓவரில் 34/4 ரன்கள் எடுத்தது. பின் களம் இறங்கிய வேதாரண்யம் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 35 ரன்களை விட நான்கு ரன்கள்  கூடுதலாக 39 ரன்கள் எடுத்து அதிரை AFCC அணியை வீழ்த்தியது. இதன் மூலம் முதலாம் பரிசு தொகையான ரூ.10,000 தட்டிச் சென்றனர். இதற்க்கு முன் அதிரையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டியில் AFCC அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Close