காதிர் முஹைதீன் கல்லூரி மாணவர்கள் இன்று காலையிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம்!

இலங்கை  தமிழர்களை இனப் படுகொலை செய்த ராஜபக்சே கும்பலை கைது செய்ய கோரியும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா திருத்தங்களுடன் ஆதரிக்க வேண்டும், ராஜபக்சேவை

 சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டங்கள் நாளுக்கு நாள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம்  உள்ளது.

இதன் ஒரு பகுதியாக இன்று நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரி மாணவர்கள் இன்று காலையிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.மாணவர்களின் இந்த உண்ணாவிரதத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக அதிரை பேரூராட்சித் தலைவர் S.H.அஸ்லம், நகர செயலாளர் இராமகுனசேகரன்,துணை செயலாளர் அப்துல் காதர்,பொருளாளர் கோடிமுதலி,தி.மு.க பிரதிநிதி மீராசாகிப்,ஒன்றிய பிரதிநிதி அன்சர் கான்,முல்லை மதி உள்ளிட்ட பலரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Close