பொறியியல் கல்லூரிகளுக்கும் இன்று முதல் காலவரையற்ற விடுமுறை!

தமிழகத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொண்டு வருவதை அடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும்

காலவரையற்ற விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி முதலில் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.இந்த போராட்டம் தற்போது விரிவடைந்து தமிழகம் முழுவதும் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.

மாணவர்களின் போராட்டம் வலுத்து வந்ததால் தமிழக அரசு அனைத்து அரசு கலைக்கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தது.

இந்த நிலையி்ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இன்று முதல் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Close