மொபைல் நிறுவனங்கள் திருடும் பணத்தை திரும்ப பெற…

நம் நாட்டில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனை, செல்போனில் நாம் Activateசெய்யாத

, தேவை இல்லாத சர்வீஸ்களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது.

முகமூடி போட்டு பேங்க் கொள்ளை அடிப்பதை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும். இந்த பிரச்சனையிலிருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். 

இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர்.Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS (Joke, Devotional மற்றும் பல) என பல துன்பங்கள் இதில் அடங்கும். 

இது போன்ற பிரச்சனை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்துள்ளீர்களோ அதை நீக்கி செய்து விடலாம்.

தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்துக்குள் புகார் செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் நீக்கம் செய்யப்படும்.

நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்.

Close