Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/adiraipi/public_html/wp-content/themes/pennews/functions.php on line 73
எம்.எல்.ஏ.ரெங்கராஜன் அவர்களை சந்தித்த இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர்!(படங்கள் இணைப்பு) - Adirai pirai
Adirai pirai
posts

எம்.எல்.ஏ.ரெங்கராஜன் அவர்களை சந்தித்த இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர்!(படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.ரெங்கராஜன் அவர்களை இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதிரை ராஜா தலைமையில் இன்று மாலை சந்தித்தனர்.இதில் அதிரை அரசு மருத்துவமனையை 24 மணி நேர செயல்பட வேண்டி மனு ஒன்று அளித்தனர்.

இந்த மனுவில் :

தாங்கள் தொகுதிக்கு உட்பட்ட அதிரை அரசு மருத்துவமனை இரவு நேரங்களில் போதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவர் இல்லாததால் ஏதேனும் விபத்து ஏற்ப்பட்டால் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது . இதனால் கொண்டு செல்லும் வழியில் உயிர் இழப்புகள் ஏற்ப்படுகிறது. ஆகையால் தாங்கள் அதிரை அரசு மருத்துவமனையை 24 மணி நேர செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.யுனானி மற்றும் சித்த மருத்துவர்கள் உடனடியாக நியமிக்க கோரி சுகாதார துறை இயக்குனரை தாங்கள் வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் இந்த கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றி தருகிறேன் என்று எம்.எல்.ஏ.ரெங்கராஜன் அவர்கள் கூறினார்கள்.        

Advertisement