அதிரை அருகே ஹஜ் பெருநாள் தொழுகைக்கு பிஜேபி யினர் தடை

 அதிரை அருகில் உள்ள வெட்டிகாடு என்ற கிராமத்தில் பல இஸ்லாமியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர்
கூலி தொழிலாளிகள். இன்று ஹஜ் பெருநாள் என்பதால் அவர்கள் பள்ளிவாசலில்  தக்பீர்  முழங்கி கொண்டு இருந்த போது அந்த ஊரில் உள்ள பாரதிய ஜனதா  கட்சியினர் பள்ளிவாசல் அருகில் கோயில் இருப்பதால் தக்பீர் மற்றும் தொழுவதற்கு தடை போட்டுள்ளனர்.இதனால் அங்கு  இருவர்களுக்கு இடையே    வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.இதனை தகவல் அறிந்த 20 க்கு மேற்பட்ட நமதூர் சகோதரர்கள் காவல்துறை துணையோடு அங்கு சென்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். பிறகு காவல்துறை பாதுகாப்புடன் ஹஜ் பெருநாள் தொழுகை நடை பெற்றுள்ளது.  
Close