அதிரை AFCC அணி TNCA கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் வெற்றி!

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் சார்பாக ஆண்டு தோறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் போட்டி இன்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் அதிரை AFCC அணியும், EFCC அணியும் மோதியன. இதில் முதலில் பேட் செய்த அதிரை AFCC அணி 25 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை குவித்தது. அந்த அணியில் அபாரமாக ஆடிய இம்ரான் 49 ரன்களை குவித்து அசத்தினார். இதையடுத்து பேட் செய்த EFCC அணி 21 ஒவர்களிலேயே 122 ரன்களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் AFCC அணி அபார வெற்றி பெற்றது.

Close