புதுப்பட்டினம் விளையாட்டு திடலை குப்பை கிடங்காக மாற்ற முயற்சி

அதிரையை அடுத்துள்ள புதுப்பட்டினம் மற்றும் இதைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், கபடி, கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் பயிற்சி எடுக்கும் களமாக இங்குள்ள விளையாட்டுத் திடல் விளங்குகிறது. மிக நீண்டகாலமாக இந்த விளையாட்டுத் திடல் இங்குள்ள மக்களோடு உணர்வுபூர்வாக ஒன்றியுள்ளது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குப்பைகளைக் கொட்டும் கிடங்காக இதை மாற்ற ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகள் பாதிக்கப்படுவதோடு, சுகாதாரச் சீர்கேடுகளும் ஏற்படும் என இப்பகுதி மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மக்களோடு ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். ஓர் விளையாட்டுத் திடலை குப்பைக் கிடங்காக மாற்றுவதென்பது முட்டாள்தனமான விபரீத முடிவு என இப்பகுதி மக்கள் கொந்தளிக்கிறார்கள். ஊருக்கு வெளியே மக்கள் புழக்கம் இல்லாத பகுதிகளில் காட்டுக்கருவை மண்டி ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு விளையாட்டுத் திடலை அழிக்கப் பார்க்கிறார்கள் என ஆதங்கப்படுகிறார்கள் இங்குள்ள இளைஞர்கள்

Close