சேதுபாவாசத்திரம் மையவாடி ஆக்கிரமிப்பு… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் முடிவு

சேதுபாவாசத்திரம் புதுத்தெருவில் உள்ள மையவாடியை கடந்த 5 தலைமுறைக்கும் மேலாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மையவாடியின் பாதி இடத்தை தனியார் ஆக்கிரமித்து அதில் தனியார் சிலர் படகுகளை நிறுத்தி வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்து ஒரு மாதகாலமாகியும் ஆக்கிரமிப்பை இதுவரையிலும் ஆய்வு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதேல் வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடமும் புகார் அளித்துள்ளனர். இவர்களும் நேரில் சென்ற ஆய்வு செய்யவில்லை என கூறப்படுகிறது.

எனவே அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு மற்றும் , சட்டவிரோதமாகவும் செயல்படும் போக்கினை கண்டித்தும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் எங்கள் இடத்தை எங்களிடமே ஒப்படைக்கவும் நீதி வேண்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் வருகின்ற 26-12-2017 செவ்வாய்க்கிழமை புதுத்தெரு ஜமாஅத்தின் சார்பாக அனைத்து ஜமாஅத், அரசியல் கட்சி , இயக்கங்கள் மற்றும் பிற சமூக மக்களையும் ஒன்றினைத்து மாபெரும்முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொண்டனர்.

Close