வெளிமாநில வியாபாரிகளை நாடும் அதிரையர்கள்… கஷ்டப்படும் உள்ளூர் வியாபாரிகள்

அதிரையில் கடந்த சில ஆண்டுகளாக வெளிமாநிலத்தவர்களின் கடைகள் அதிகரித்து வருகின்றனர். விலை குறைவாக இருப்பதால் தரமற்ற பொருள் என்று கூட பார்க்காமல் மக்கள் அதனை வாங்கி வருகின்றனர். இதனால் அதிரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

போஸ்ட் ஆபிஸ் தெருவில் பிரைட் எலக்ட்ரிக்கல்ஸ் நடத்தி வரும் மீரா மைதீன் அவர்கள் வியாபாரத்தில் பின்னடைவு ஏற்ப்பட்டாலும் தளர்ந்து விடாமல் மீண்டும் அல்லாஹ்வின் உதவியால் தன் வியாபாரத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என பெரும் சிந்தனையால் பொருமையாக ஸ்தாபனத்தை நடத்தி வருகிறார்.

நம் குழுமத்தில் உள்ள நட்பு வட்டங்கள் நண்பர் மீரா மைதீன் கடையில் நம் உபயோகத்திற்க்கு தேவையான மின் மற்றும் பிலம்பிங் உபயோகப் பொருள்கள் வாங்கி நண்பர் மீராவின் விராபாரத்தை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும். தரமற்ற பொருள்கள் குறைந்த விலையில் வட மாநிலத்தவர்கள் கடையில் வாங்கி ஏமாறுவதை விட தரமான பொருள் 5 ரூபாய் அதிகமாக இருந்தாலும் நம்பிக்கையாய் வாங்கி பயன்பெறுவோம்.

Close