Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

மலேசியாவில் சிக்கியுள்ள பட்டுக்கோட்டை பெண்ணின் குடும்பத்திற்கு அதிரை SDPI நிதியுதவி..!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள செங்கபடத்தான்காட்டை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுக்கு மலேசியாவில் உணவகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சீனு என்பவர் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு அனுப்பியுள்ளார். இவரை மலேசியாவில் உள்ள வசந்தா என்பவர் அவருக்கு தெரியாமல் சீன பெண் ஒருவரிடம் விலைக்கு விற்றுள்ளார். இதையடுத்து அந்த இளம் பெண் சீன பெண்ணால் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு துண்புறுத்தப்பட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தஞ்சை மாவட்ட எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளிடம் தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார். இதனையடுத்து SDPI கட்சியினர் மலேசியாவில் இயங்கி வருக் ஐ.எம்.ஐ.எம் அமைப்பை தொடர்புகொண்டு அவர்களின் மூலம் இளம் பெண்ணை காப்பாற்றியுள்ளனர். தற்போது அப்பெண் மலேசியாவில் உள்ள மகளீர் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள வசந்தா மற்றும் அவர் சார்ந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பெண்ணை இந்தியா அழைத்து வரக்கோரி அவரது உறவினர்கள் SDPI நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பானுப்ப்பிரியாவின் வீட்டிற்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹமது இலியாஸ் தலைமையில் மாவட்ட செயற்க்குழு சென்று அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி உதவியும் வழங்கபட்டது.