பேருக்கு தான் பேரூராட்சி! கவனிப்பாரின்றி கிடக்கும் கடற்கரைத்தெரு வாசிகள்

அதிரை கடற்கரைத்தெருவில் கடந்த பல மாதங்களாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. தெருவின் நுழைவு வாயிலாக கருதப்படும் இப்பகுதியில் தொடரும் இப்பிரச்சனை காரணமாக அவ்வழியாக பெண்கள் மதர்ஷா செல்லும் மாணவிகளும், தொழுகையாளிகளும், பள்ளி குழந்தைகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை அடுத்து யாரையும் எதிர்பார்காமல் அப்பகுதி மக்களிடம் நிதி வசூல் செய்து சுகாதார பணிகளை முஹல்லாவாசிகள் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நமது அதிரை பிறையில் தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டு வருகிறோம்.. ஆனால் இதற்கு பேரூராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அதிரை கடற்கரை தெரு முஹல்லா வாசிகள், அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தை அடுத்து 3 நாட்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் 6 நாட்கள் கடந்துள்ள நிலையில் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் நாளுக்கு நாள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

Close