Adirai pirai
islam

ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அறிவிக்க முடியாது… ஐ.நா திட்டவட்டம்

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவை ஐ.நா.சபையின் பொதுக்குழு நிராகரித்து விட்டது.

ஜெருசலேமை தமது நாட்டின் தலைநகராக பிரகடனப்படுத்தியது இஸ்ரேல். இதற்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அத்துடன் டெல் அவிவ்- நகரத்தில் உள்ள தமது நாட்டின் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவோம் எனவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

ஜெருசலேம் குறித்து ஐநா.சபையின் பொதுக்குழு வாக்கெடுப்பு நடத்தியது. ஐ.நா.வில் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்காது என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஐ.நா. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் 35 உறுப்பு நாடுகள் நடுநிலை வகித்தன. இஸ்ரேல், கவுதமாலா உள்ளிட்ட 9 நாடுகள் மட்டுமே டிரம்ப்பின் முடிவை ஆதரித்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 127 நாடுகள் இந்த முடிவை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றி வாக்களித்தன.

இதையடுத்து, அமெரிக்காவின் முடிவு தன்னிச்சையானது என்றும் அர்த்தமற்றது என்றும் ஐநா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் உலக நாடுகள் டிரம்ப்பின் மிரட்டலை பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy