அதிரையில் நடைபெறும் மினி மாரத்தான் போட்டிக்கான முன் பதிவு!

ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற PFI இன் தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக அதிராம்பட்டினத்தில் மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகிற 30-12-2017 சனிக்கிழமை அன்று அதிரை தக்வா பள்ளியிருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரம் E C R -ல் மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற உள்ளது அதிரை தக்வா பள்ளியில் தொடங்கி – அதிரை பேருந்து நிலையத்தில் முடிவடைகிறது.

இதையொட்டி அதிரையில் உள்ள 5 ஜும்மா பள்ளிகளில் இதற்கான முன் பதிவு நடைபெற்றது. இதில், பெரியோர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தனர்.

Close