Adirai pirai
உள்ளூர் செய்திகள்

செந்தலை அருகே சாலை விபத்து… அதிரை நபர் படுகாயம்..! (படங்கள் இணைப்பு)

செந்தலை அருகே ஈசிஆர் சாலையில் வந்த கார் அதிரையை அடுத்துள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்த நபர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மணல்மேல்குடியிலிருந்து வந்த கார் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் செந்தலைப்பட்டினம் பொதுநலச்சங்கத்தின் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அவருக்கு தலையின் பின்புறத்தை பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.