Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை இண்டேன் கேஸ் ஏஜென்சி உரிமையாளருடன் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

வீட்டிற்க்கு சமையல் எரிவாயு பதியப்பட்டால் அந்த ஸ்தாபனத்தின் ஊழியர்களால் வீட்டு முகவரியில் விநியோகம் செய்வது அவர்களின் வேலை. இப்போது ஒரு சிலிண்டர் கேஸ் விலை 758.50 /- இதைதான் அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக அந்த ஊழியர்கள் அதை ரவுண்ட் கட்டி 800 /- தாருங்கள் என்று வழுக்கட்டாயமாக கேட்கின்றனர். சிலிண்டர் நமது வீடு வரும் வரையிலும் சேர்த்து நம்மிடமிருந்து தொகை வசூலிக்கப் படுகிறது. அவர்கள் கேட்க்கும் தொகை கொடுக்க வில்லையென்றால் உங்க வீட்டு அட்ரஸில் இரண்டு கேஸ் இருக்கு ஒன்றை கேன்சல் செய்யுங்க இனிமேல் இரண்டு வராது ஒன்றுதான் வரும் என்றும், ஒரு சிலிண்டர் உள்ளவர்களிடம் அடுத்த முறை கேஸ் கொண்டு வரமாட்டோம் நீங்கதான் ஆபீஸ் வந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேஸ் ஊழியர்களின் மிரட்டலுக்கு பயந்து பெண்கள் கேட்கும் தொகையை கொடுத்து விடுகிறார்கள்.

இது தொடர்பாக நமது அதிரை பிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் பாலு இண்டேன் கேஸ் ஏஜென்சி உரிமையாளரை நேரில் சந்தித்து இது குறித்து புகாரளித்தனர். அப்போது கேஸ் விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணம் தரவேண்டிய அவசியமில்லை எனவும், வாசல் வரை வந்து ஒப்படைக்க வேண்டியது அவர்களின் பொறுப்புஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.