அதிரை பேரூராட்சிக்கு முன்னாள் சேர்மன் அஸ்லம் கண்டனம் (வீடியோ இணைப்பு)

நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் அரசுக்கு வரி செலுத்தாமல் இல்லை. சொத்து வரி, வணிக வரி, நிறுவன வரி என பல விதமாக அவரவர் தகுதிக்கு ஏற்றார் போல்.இந்திய நாட்டின் குடிமக்களாகிய நாம் செலுத்திவருகிறோம். நாம் செலுத்தும் வரியை கொண்டு குடி மக்களாகிய நமக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தருவது அரசாங்கத்தின் தலையாய கடமை.

செய்து தரும் கடமைகளில் அலட்சிய போக்கு காட்டும் அரசு, வரி அல்லாமல் மத்திய அரசு திடக்கழிவு மேலான்மை திட்டம் என்று ஒரு சட்டத்தை அமுல்படுத்தி நம்மிடமே மாதமாதம் தொகையை பிடுங்க நினைக்கிறது வரி தொகை கட்டுவதற்க்கு கொஞ்சம் தாமதமானால் சட்டத்தை கொண்டு குடி மக்களை மிரட்டும் அரசு மக்களின் கஷ்டங்கள் உள் வாங்காமல் மக்களிடையே அரசின் நம்பகத்தன்மையை இழக்க செய்கிறது.

அதிரை பேரூராட்சியில் நொட்டீஸ் போர்டில் மக்களின் கவனத்திற்க்கு ஒட்டப்பட்டிருந்த தகவல் என்ன வென்றால்,

திடக் கழிவு மேலான்மை திட்டத்திற்க்காக வரியை விட மேலதிகமாக வசூல் செய்யப்படுமாம்.

குடியிருப்பு, நிறுவனம், வணிகம் என பிரித்து வரியின் தொகைக்கு தக்கவாறு அதிகபடியான வசூல் மக்களிடமிருந்து பிடுங்குவதின் மூலம் குடி மக்களின் குரல் வலையை நெறுக்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். செலுத்தும் வரிக்கே தரமான சாலை வசதிகள்,கழிவு நீர் கால்வாய்கள்,திடக்கழிவுகள் கொட்டும் தொட்டிகள் இல்லை என்பதே ஒவ்வொரு குடிமக்களின் ஆதங்கம்.

Close