அதிரையிலும் NO PARKING !

பெரும்பாலும் இந்த வார்த்தையை நகரங்களில் கேள்விபட்டிருப்போம். நமதூர் அதிரையில் இதுவரை நோ பார்க்கிங் என்ற ஒன்று இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால், பேருந்து நிலையத்திற்கு அருகே சாலையோரம் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பெரிய அளவில் வாகன நெரிசல் ஏற்படவில்லை என்றாலும், அவ்வப்போது சில இடையூறுகள் நிகழும். இந்த சூழலில் இன்று அதிரை பேருந்து நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் டெம்போவில் கொண்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Close