Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற ஜனாசா குளிப்பாட்டுதல் பயிற்சி வகுப்பு

26 டிசம்பர் இன்று காலை 11:15 மணி முதல் லுஹர் தொழுகை வரை ஜனாசா குளிப்பாட்டுதல் செய்முறை விளக்க நிகழ்ச்சி சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் அப்துல் ஹாதி மௌலானா, இப்ராஹீம் மௌலானா, அப்துல் மஜீது ஆகியோர் கலந்துகொண்டு ஜனாசா குளிப்பாட்டுவதற்கான ஒழுங்குமுறைகளை கற்பித்தனர். இதில் சுமார் 70 பேர் வரை கலந்துகொண்டு ஜனாசா குளிப்பாட்டுவதற்கான நெறிமுறைகளை கற்றுக்கொண்டனர்.