Adirai pirai
Technology

வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ரிலையன்ஸ் ஜியோ வரவு பல்வேறு டெலிகாம் நிறுவனங்களின் சேவை கட்டணங்களை குறைக்க வைத்த நிலையில் 2018 புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து வோடபோன் நிறுவனம் ஜியோவுக்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. வோடபோன் அறிவித்துள்ள புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன்படி வோடபோன் ரூ.198 விலையில் ரீசார்ஜ் செய்யும் போது அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங், 100 எஸ்எம்எஸ், தினமும் 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் புதிய சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

இரண்டாவது சலுகையின் விலை ரூ.229 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையில் வாடிக்கயைாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமி்ட்டெட் அழைப்புகள், இலவச ரோமிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை புதிய வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

ஜியோ அறிவித்த புத்தாண்டு சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.199 திட்டத்தில் தினமும் 1.2 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து ரூ.299 விலையில் வழங்கப்படும் மற்றொரு சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் போன்றே பாரதி ஏர்டெல் நிறுவனமும் ரூ.199 விலையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ஏர்டெல் ரூ.199 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 1 ஜிபி டேட்டா, ரோமிங் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.