Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

அதிரையருக்கு சமூக சேவைக்கான சாதனையாளர் விருது வழங்கிய சர்வதேச அமைதி பல்கலைகழகம் (படங்கள் இணைப்பு)

அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்தவர் மரைக்கா கே.இத்ரீஸ் (வயது 43). இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் அதிரை நகர சேர்மனாகவும், சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் துணை தலைவராகவும், அதிரை சுற்றுசூழல் மன்றத்தின் துணை செயலராகவும் பொறுப்பு வகித்து பல சேவைகளை செய்து வருகிறார். இதையடுத்து இவரை கவுரப்படுத்தும் விதமாக சர்வதேச அமைதி பல்கலைகழகத்தின் சார்பாக கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சிங்கார் இண்டெர்நேசனல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 10 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டமும், 5 பேருக்கு சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அமைதி பல்கலைகழகத்தின் செனட்டர் டாக்டர் எஸ்.எம்.ரஸ்மி ரூமி தலைமையிலும், இந்தியன் ஹியூமன் விஜிலன்ஸ் அமைப்பின் பொது செயலாளர் டாக்டர் அப்துல் காதர் அவர்களும், திரைப்பட இயக்குனர் என்.பி.இஸ்மாயில், இசையமைப்பாளர் நவரஞ்சினி ஶ்ரீதர், பாடலாசிரியர் தாழை சேக் தாஸ், பீப்புள் ஃபோரம் ஆஃப் இந்தியா, நேசனல் பாரத் சேவா சமாஜ் அமைப்பு தேசய தலைவர் டாக்டர்.மணிமொழியன், ஜெர்மனியை சேர்ந்த கிரிஸ்டின் பில்லிங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.