அதிரை CMP லேன் கால்வாய் பிரச்சனையை பார்வையிட்ட பேரூராட்சி துப்பரவு ஆய்வாளர்!

கடந்த ஜூலை 17-2017 அன்று நமது அதிரை 21-வது வார்டுக்கு உட்பட்ட சி.எம்.பி லேன் ஹனீப் பள்ளி அருகாமையில் இருந்து VKM ஸ்டோர் வரை கழிவு நீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. VKM பகுதி ஹனீப் பள்ளி இருக்கும் இடத்தை விட மூன்று அடி உயரமாக உள்ளது. இந்த சூழலில் கழிவு நீர் ஓடும் வாட்டம் இன்றி தலைகீழாக தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு கழிவு நீர் அனுப்பும் அதி புத்திசாலித்தனமான பணியை பேரூராட்சி செய்தது. எந்தவொரு பயனும் இன்றி மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த பணி குறித்து அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அணி நிர்வாகிகள் நேரில் சென்று ஊழியர்களிடமும் ஒப்பந்ததாரரிடமும் விசாரித்தனர். ஆனால் இந்த கால்வாய் அமைத்து முடிக்கப்பட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்போது முறையான வாட்டம் இல்லாத காரணத்தால் ஹனீப் பள்ளி அருகே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இது சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் பேரூராட்சி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் புகாரளித்தனர். இதனை அடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து தற்காளிகமாக துப்புரவு பணியாளர்கள் மூலம் சாக்கடை அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். விரைவில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருவதாக அவர் உறுதியளித்தார்.

Close