தமிழக அணிக்காக விளையாடிய அதிரை கால்பந்து வீரர் அபூபக்கர் பெற்றோர்களுக்கு வைக்கும் வேண்டுகோள் (வீடியோ இணைப்பு)

அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்தவர் ஜமால் முஹம்மது. அதிரை காதிர் முஹைதீன் பள்ளி மாணவரான இவர் AFFA கால்பந்து அணியின் முன்னாள் வீரரான இவருடைய மகனின் பெயர் அபூபக்கர். பள்ளி அணிக்காகவும் AFFA அணிக்காகவும் தற்போது விளையாடி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தமிழ்நாடு ஜூனியர் கால்பந்து அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து பஞ்சாபில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கால்பந்து தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். இதில் உத்தர பிரதேச அணிக்கு எதிராக விளையாடிய தமிழ்நாடு அணி 3-1 என்ற கோல்கணக்கில்தோல்வியை தழுவியது. இருப்பினும் தமிழ்நாடு அணி தரப்பில் அடிக்கப்பட்ட அந்த ஒரு கோல் நமதூர் வீரர் அபூபக்கர் விளாசியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிரை AFFA அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த அபூபக்கரிடம் நமது அதிரை பிறை சார்பாக பேட்டி எடுத்தோம். 

Close