அதிரையை தூய்மையாக்கும் துப்புரவு தொழிலாளர்ளை கவுரவித்த சுற்றுசூழல் மன்றம்! (படங்கள் இணைப்பு)

அதிரையை தூய்மையாக்கும் உன்னத பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் உடல் நலனை கருத்தில் கொள்ளாமல் குறைந்த ஊதியத்தில் இந்த மகத்தான சேவையை புரிந்து வருகின்றனர். பல துறைகளை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவிக்கும் நமதூர் அதிரையில் இந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு இது வரை எந்தவித கவுரமும் கிடைத்தது இல்லை.

இந்த சூழலில் இவர்களை கவுரவிக்கும் விதமாக அதிரை சுற்றுசூழல் மன்றம் சார்பில் துப்புரவு ஊழியர்கள், பேரூராட்சி அதிகாரிகள் உடனான நட்புறவு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு பரிசுகளும், மரக்கன்றுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டன. இதில் இமாம் ஷாபி பள்ளி தாளாளரும், அதிரை FM 90.4 இன் நிறுவனருமான M.S.தாஜுத்தீன், சுற்றுசூழல் மன்ற தலைவர் விவேகனந்தம், துணைத் தலைவர் எஸ்.முஹம்மது இப்ராஹிம் , செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம், துணைசெயலாளர் மரைக்கா இத்ரீஸ் அஹமது, பேராசிரியர் செய்யது அஹமது கபீர், அதிரை துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Close