Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

மாவட்ட ஆட்சியரை பட்டுக்கோட்டை MLA உடன் நேரில் சந்தித்த அதிரை அதிமுக வினர்!

அதிரையில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் அவர்களுக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட தினங்களில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் நாட்டுப்படகு மீனவர்களின் எல்லைக்குள் அத்துமீறி வந்த விசைப்படகு மீனவர்கள் அவர்களின் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலையை சேதப்படுத்தி சென்றனர்.

இதையடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி இன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் தலைமையில் அதிரை அதிமுக நகர செயலாளர் பிச்சை, துணை தலைவர் M.A.முஹம்மது தமீம், மீனவர் சங்க தலைவர் பாஞ்சாலன், கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கித்தெரு, தரகர் தெரு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியர் அண்ணாதுரையை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மீன்வளத்துறை, கடலோர காவல் படை, வருவாய்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.