Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரை FUTURE NOW கம்பியூட்டர் பயிற்சியகத்தில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழா (படங்கள்)

அதிரை ஆஸ்பத்திரி புதுப்பள்ளிவாசலுக்கு எதிரில் கடந்த 11 ஆண்டுகளாக FUTURE NOW எனப்படும் கம்பியூட்டர் பயிற்சியகம் அமைந்துள்ளது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படித்து பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிரை ஜீனியஸ் டுடோரியல் செண்டர் ஆசிரியர் ரசீத் அஹ்மத் அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

இது குறித்து, இந்த நிறுவனத்தின் மேலாளர் அபூஹுரைரா கூறுகையில், இந்த ஆண்டில் 800 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் இங்கு பயிற்சிபெற்றதாக கூறினார். ஏழை எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில்தரமான கம்பியூட்டர் பயிற்சியளிப்பதாக உதன் முதல் நோக்கம் என கூறிய அவர், இதற்காகவே கோடைகால பயிற்சி முகாம்களையும் நடத்தி வருவதாக அவர் கூறினார். இந்த விழா முடிவில் FUTURE NOW துணை மேலாளர் அப்துல்லாஹ் அனைவரும் நன்றி கூறினார்.