Adirai pirai
Crime உள்ளூர் செய்திகள்

அதிரை ECR சாலையில் ஹார்ட்வேர் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளை (படங்கள் இணைப்பு)

அதிரையில் ECR சாலையில் சாரா திருமண மண்டபத்திற்கு எதிரே ஹசன் ஹார்ட்வேர்ஸ் என்ற கடை அமைந்துள்ளது. இதனை கடற்கரை தெருவை சேர்ந்த அபுல் ஹசன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல நேற்றிரவு கடையை அடைத்துவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை மீண்டும் கடைக்கு வந்தபோது கடை முழுவதுமாக திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ₹40 ஆயிரம் பணம், 3 பேன்கள், இதர சில பொருட்களை கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதனால் தற்போது பேஉம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.