குடும்பத்துடன் மக்காவுக்கு சுற்றுலா சென்ற அதிரையர்கள் (படங்கள் இணைப்பு)

பூனைக்கொல்லை கூட்டாஞ்சோறு என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுமத்தை தொடங்கி வாரா வாரம் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சாப்பாடுகளை சமைத்துக்கொண்டு ஜித்தாவில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று கூட்டாஞ்சோறு சாப்பிட்டு வந்தனர். இந்தநிலையில் அடுத்ததாக இந்த வாரம் மக்காவுக்கு சென்று இஸ்லாமிய வரலாற்று தளங்களை பார்க்கலாம் என அவர்கள் முடிவெடுத்தனர். ஜித்தாவில் வசித்து வரும் அஜ்வா நைனா அதிரையர்கள் மக்காவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொடுத்தார்.

இதையடுத்து நேற்று 30-12-2017 அன்று 50 பேர் கொண்ட குழுவினர் மக்காவுக்கு சென்று இஸ்லாமிய வரலாற்றை பறைசாற்றும் தளங்களை கண்டு நெகிழ்ச்சியடைந்தனர். இதனை அப்துல்அஜீஸ் அவர்களின் மகன் அப்துல் பாஷித் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.

வரலாற்று சிறப்பம்சங்களை கண்டுகளித்த மணித்துளிகள்:

11:45 ஹுதைபியா உடன்படிக்கை

12:45 லுஹர்,அஸர் தொழுகை

1:00 மதிய உணவு

2:30 அருங்காட்சியகம்

3:45 அரஃபா

4:30-5:40

ஜபல் அல் நூர், முஜ்தலிஃபா,மினா,சில வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், ஹிரா குகை அடிவாரம். இந்த வரலாற்று தளங்களுக்குறிய விளக்கங்களையும், வரலாற்றையும் மௌலானா ஜியாத் மக்கி அவர்கள் எடுத்துறைத்தபோது முஹம்மத் நபி அவர்களுடனே இருந்த உணர்வு ஏற்பட்டதாக கூறுகின்றனர் அதிரையர்கள்.

இந்த ஜியாரத் பயணம் இறுதியாக மீராசா ரஃபியாவின் மகள் ஷபீனா மீராஷாவின் கிரா அத்தோடு இனிதே முடிவடைந்தது. அங்கு சென்றிருந்த குழந்தைகள் உள்ளிட்ட அனைவரையும் தாஜுதீன், அப்துல் அஜீஸ், அஹ்மத் அஸ்லம் ,மீராஷா ஆகியோர் கவனித்துக்கொண்டனர்.

Close