அதிரையில் AFFA வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

நெய்வேலி கால்பந்து அகாடமி மற்றும் கடலூர் கால்பந்து அஸோசியேசன் இணைந்து NLC இந்தியா லிமிடெட் ஆதரவுடன் 29-12-2017 & 30-12-2017 ஆகிய தினங்களில் நடைபெற்ற மாநில மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் 13 வயதுக்கு & 15 வயதுக்கு உட்பட்டோர்கான போட்டியில் களம் இறங்கிய அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அஷோசியேசன் (AFFA) அணியினர்.

மிகச்சிறப்பாக விளையாடி இரண்டு தொடர் வெற்றியினால் கால் இறுதியில் நுழைந்து அதிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறிய AFFA அணி அரை இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது. மாநில அளவில் U13 பிரிவில் 33 அணிகள் போட்டியிட்டதில் AFFA அணி 4ம் இடம் பிடித்ததுள்ளது

போட்டியில் பங்கேற்ற வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இன்று கிராணி மைதானத்தில் AFFA நிர்வாகிகள் கால்பந்து கழகம் வழங்கிய சான்றிதழ்களும் பரிசுகளும் பெற்றோர் முன்னிலையில் கால்பந்து வீரர்களுக்கு வழங்கி கவுரவித்தனர்.

இதில் AFFA அணியின் M.A.முஹம்மது தமீம் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினர்கள் M.B.அபூபக்கர் & செய்யது முஹம்மது கபீர், நிர்வாகிகள் அனஸ், பாருக், சேக் தம்பி பிற நிர்வாகிகளும், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வெளிபடுத்தினர்.

Under 13 பிரிவில் விளையாடிய AFFA வீரர்கள் விபரம் பள்ளி வாரியாக:

இமாம் ஷாபி (ரஹ்) பள்ளி

A.ஆத்தீஃப்
A.அரசாத்
A.ஹுசைன்

காதிர் முஹைதீன் பள்ளி

S.அப்துல்லாஹ்
S.ஆத்தீஃப்
முஷரஃப்
இஸ்மாயில்

பிரிலியண்ட் பள்ளி

A.ஜாபிர்

கிரசண்ட் பள்ளி

முபாருத்தீன்

Close