அதிரை பிலால் நகரில் MLA சி.வி.சேகர் நேரில் ஆய்வு (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு CV சேகர் அதிரை பிலால் நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நிலவும் சுகாதார பிரச்சனைகள், சாலை பிரச்சனைகள் குறித்து அவர் பொதுமக்கள் மற்றும் நகர அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து அப்பகுதியில் உடனடியாக தார்ச்சாலையும் வடிகால் வாய்க்கால் அமைக்கவும் உடனடியாக ஆணை பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது ஊராட்சி அதிகாரிகள் ஒன்றிய ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் பட்டுக்கோட்டை நகர செயலாளர் பட்டுக்கோட்டை ஒன்றிய கழகச் செயலாளர் அதிராம்பட்டினம் நகர செயலாளர் பிச்சை மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Close