Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரை அனைத்து ஜும்மா பள்ளிகளின் சார்பில் முக்கிய அறிவிப்பு!

கடந்த 29/12/2017 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு அதிரை மரைக்கா பள்ளியில் முத்தாலாக் சட்டம் தொடர்பாக முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஜும்மாவுக்கு பிறகு ஜமாத்துல் உலமா சபை சார்பாக நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு வண்டிப்பேட்டையிலிருந்து மொத்தமாக மூன்று பேருந்துகள், 34 வேன்களில் செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி நாளை அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் 15 நிமிடத்திற்கு முன்பாகவே தொழுகை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.