Adirai pirai
உள்ளூர் செய்திகள்

மல்லிப்பட்டினத்தில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி… மதுக்கடையை மூட கோரிக்கை!

இன்று காலை மல்லிப்பட்டினத்தில் உள்ள BSNL டவர் மீது ஏரி அருணாச்சலம் என்பவர் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறினார். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை சமாதானம் செய்து கீழே இறக்கினர். இது குறித்து தெரிவித்த அவர், மல்லிப்பட்டினத்தை அடுத்த இரண்டாம்புளிக்காடு பகுதியில் உள்ள மறவன்வயல் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனியார் ஆக்கிரமித்து டாஸ்மாக் கடை திறந்துள்ளதாக கூறினார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வரை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy