Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

ஷரீஅத் காக்க பட்டுக்கோட்டையில் ஓரே அணியில் திரண்ட இஸ்லாமியர்கள் (படங்கள் இணைப்பு)

https://youtu.be/SyYRaMMc110

மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்தலாக் மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து இன்று மாநிலம் தழுவிய போராட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த ஜமாத்துல் உலமா சபை முடிவு செய்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு பகல் 2 மணியளவில் இந்த கண்டன பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் 30க்கும் அதிகமான பேருந்துகளில் இருந்து ஏராளமான அதிரையர்கள், முத்துப்பேட்டை, மதுக்கூர், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் பட்டுக்கோட்டையை நோக்கி படையெடுத்து சென்றனர்.

இதில் தமுமுக மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது, அதிரை ரஹ்மானியா அரபிக்கல்லூரி பேராசிரியர் தேங்கை சரபுத்தீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில துணை தலைவர் ஷேக் நசுருத்தீன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் சமீம் அஹமத், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் ஷேக் அலாவுத்தீன் மற்றும் உலமா பெருமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.