அதிரை APL கிரிக்கெட் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறியது அதிரை AFCC!

அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC)  நடத்தும் பத்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி  நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.

10ம் நாளான இன்று 3 ஆட்டங்கள் நடைப்பெற்றன. முதல் ஆட்டத்தில் அதிரை AFCC Blue அணியை எதிர்த்து மதுக்கூர் அணி விளையாடியது. இதில் சிறப்பாக விளையாடிய மதுக்கூர் அணி வெற்றி பெற்றுது. இரண்டாவது ஆட்டத்தில் தஞ்சை RVMCC அணிய எதிர்த்து தஞ்சை SKY CC அணி விளையாடியது. இதில் RVMCC அணி அபார வெற்றி பெற்ற்து.

மூண்றாவது ஆட்டத்தில் அதிரை AFCC அணியை எதிர்த்து இரண்டாவது போட்டியில் RVMCC அணியிடம் தோல்வியை தழுவிய தஞ்சை SKYCC அணி விளையாடியது. இதில் அபாரமாக ஆடிய அதிரை AFCC அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

 அதிரை APL கிரிக்கெட் தொடர் குறித்த தினசரி பதிவுகளுக்கு இணைந்திருங்கள் அதிரை பிறையுடன்.

Advertisement

Close