அதிரையில் ஹோட்டல் உடமைகளை சூறையாடிய கயவர்கள்!

நமதூர் கீழத்தெருவில் ரியாஸ் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் இன்று காலை அடையாளம் தெரியாத சில சமூக விரோதிகளால் ஹோட்டல் உடமைகள் சேதப்படுத்தப்பட்டது.

இது போன்று ஊரின் பல்வேறு இடங்களில் பொது, தனியாருக்கு சொந்தமான உடமைகளும் கடந்த சில நாட்களாக சேதப்படுத்தபட்டு வருகின்றது.

இது போன்ற செயல்கள் மேலும் தொடராமல் இருக்க காவல் நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர் ரியாஸ் புகார் அளித்துள்ளார்.

Close