சென்னையில் நடைபெற்ற அதிரை அஹ்மத் அவர்களின் நபி(ஸல்) வரலாற்று புத்தக வெளியீட்டு விழா!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ரிப்போர்டர்ஸ் கில்ட்டு பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்கள் எழுதிய நபி(ஸல்) வரலாற்று நூல் வெளியீட்டு விழா, இலக்கிய சோலை சார்பாக இன்று மாலை 6:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவுக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி தலைமை தாங்கினார்.

இதில் புதிய விடியல் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் ரியாஸ் அஹமதுவின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, ரஹ்மத் பப்ளிகேஷன் தலைமை மேல் ஆய்வாளர் கான் பாகவி, முஹம்மது இப்ராஹிம் பாகவி ஆகியோர் கலந்துகொண்டு ஏற்புரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய NCHRO தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் புத்தகத்தை வெளியிட்டார். இதையடுத்து நூல் ஆசிரியர் அதிரை அஹமது ஏற்புரை வழங்கினார். இதையடுத்து இலக்கிய சோலை நிர்வாகக்குழு உறுப்பினரின் நன்றியுரையுடன் இந்த நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. இதில், ஏராளமான ஆண்கள், பெண்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Close