அதிரை ஆஸ்பத்திரி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் சேர்மன் வாடியில் இருந்து நேரடியாக ஈசிஆர் சாலைக்கு செல்லும் முக்கிய சாலையாக ஆஸ்பத்திரி தெரு – திலகர் தெரு சாலை உள்ளது. இந்த வழியாக தனியார் கிளினிக்கும், அரசு மருத்துவமனையும், பேருந்து நிலையமும், கடைத்தெருவும் உள்ளது. இந்த வழியே அதிகளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களும், வாகனங்களும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பாதை கடந்த பல வருடங்களாக பழுதடைந்து பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி மக்களும் பலமுறை பேருராட்சி மன்றத்தில் நடவடிக்கை எடுக்க சொல்லியும் எந்த பலனும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் இங்கு சாலை சீரமைக்கும் பணி கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. முதல் கட்டமாக சாலை அளவு எடுத்து ஜல்லி, கருங்கற்கள் கொட்டப்பட்டன. அவை சமன்படுத்தப்பட்ட பிறகு செம்மன் அடிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இங்கு தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

Close