தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் 3 விருதுகளை பெற்று அதிரைக்கு பெருமை சேர்த்த ரெட் கிராஸ் (படங்கள் இணைப்பு)

தஞ்சை மாவட்ட ஆண்டு பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் ரெட் கிராஸ் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், துணை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஆண்டறிக்கையை ரெட்கிராஸ் மதிப்பியல் செயலர் ஜோசப் வாசிக்க அடுத்ததாக நிதிநிலை அறிக்கையை ரெட்கிராஸ் பொருளாளர் முத்துக்குமார் வாசித்தார்.

இதையடுத்து முக்கிய நிகழ்வாக கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட கிளைகளுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் அதிராம்பட்டினம் ரெட்கிராஸ் கிளைக்கு சிறந்த சேவை, அதிக உறுப்பினர் சேர்க்கை, தீயணைப்பு பயிற்சி முகாம் உள்ளிட்டவற்றுக்கான 3 விருகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் அதிரை ரெட்கிராஸ் தலைவர் மரைக்கா கே.இத்ரீஸ் தலைமையில் அதிரை ரெட்கிராஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Close