ஜாகிர் நாயகின் வீடியோக்களில் எந்த தவறான கருத்துக்களும் இல்லை-நீதிபதி மன்மோகன் சிங்

சட்டவிரோத பண கையாடல் செய்ததாக மத்திய அமலாக்கப்பிரிவினர் தொடுத்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி மன்மோகன் சிங், மத்திய அரசு வழக்கறிஞரிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினார். மத்திய அரசு ஜாகிர் நாயக்கை மட்டும் குறிவைத்து வழக்குகளை போடுவது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை சொத்து குவித்துள்ள 10 போலி சாமியார்களின் பெயரை தருகிறேன், அவர்கள் மீது மத்திய அரசு வழக்கு போட தயாரா எனவும், சாமியார் ஆசாரம் பாபு மீது மத்திய அரசு இது வரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், ஜாகிர் நாயகின் பேச்சுக்கள் இளைஞர்களை தவறான வழியில் அழைத்து செல்வதாக கூறினார். இதனை வண்மையாக கண்டித்த நீதிபதி, ஜாகிர் நாயக் மீதான இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லை என்றார். ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவுகளை தானும் கேட்டுள்ளதாக கூறிய நீதிபதி மன்மோகன் சிங், அதில் ஆட்சேபனைக்குறிய எந்த கருத்துக்களும் இடம்பெறவில்லை என்றார். கடந்த மாதம் ஜாகிர் நாயக் விவகாரத்தில் இண்டெர்போலிடம் அசிங்கப்பட்ட மத்திய அரசு, இந்த டெல்லி நீதிபதியிடம் மூக்கு உடைபட்டு நிற்கிறது.

Close