அதிரையில் குடும்பத்துடன் கஞ்சா விற்பனை செய்தவர்களை கையும் களவுமாக பிடித்த தமுமுக வினர்!

அதிரையில் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா விற்பனை கட்டுப்படுத்த முடியாத முடியாத அளவில் உள்ளது. அதிரை அருகே ஏரிப்புறக்கரை பகுதியில் விற்பனை செய்யப்படும் கஞ்சாவை இளைஞர்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அப்பகுதியில் கணவனும் மனைவியும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்துவருவதாக அதிரை தமுமுக வினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமுமுக மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா தலைமையல் தமுமுக வினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரபல கஞ்சா கடத்தல் குற்றவாளியான சேகரின் தாய் செல்லம்மாள் தந்தை பெரியசாமி ஆகிய இருவரையும் கஞ்சா விற்பனை செய்யும் போது கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 100 க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.

Close